top of page
Search

மக்கள் திரு அவையின் ராஜகுரு

மனதின் எண்ணங்களை வெளிப்படுத்த மனிதன் கண்டுபிடித்த அற்புதமான ஒரு கருவி மொழி. மொழியின் வார்த்தைளோடு விளையாடுவது ஒரு அழகிய சுகானுபவம் ,அந்த வார்த்தைகளையோடு ஒரு கொள்கையை கட்டமைப்பது மனித இலட்சியத்தின் உச்ச கட்டம். அப்படி ஒரு உயர்ந்த இலட்சியத்துடன் சமகாலத்தில் பயணித்தவர் திருமிகு AMMS சேவியர் (ராணி சேவியர்) அவர்கள்.

இந்த உலகிலே பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு குருக்கள் தோன்றியிருக்கின்றனர், சீடர்கள் குருக்களை தேடி அலையலாம் . ஆனால் குருக்கள் தான் சீடர்களை தெரிவு செய்கின்றனர். தன்னை தேர்ந்தெடுத்த குரு இயேசுபெருமான் என்பதை பெருமகிழ்வோடு கண்டு கொண்டவர் ராணி சேவியர் அவர்கள்.


இயேசு பெருமானோடு கரம் கோர்த்து பயணிப்பதில் அவர்கள் மன நிறைவோடு இருந்தார்கள். அதற்கு ராணி சேவியர் சொல்லும் காரணம் ; அவர் சொன்னதைச் செய்தார்.

பல கருத்துக்களை இயேசுவின் பிறப்புக்கு முன் வந்த பல குருக்களும் சொல்லியிருக்கின்றனர். ஆனால் அந்த கருத்துக்களை செயல் வடிவிலே நிறைவேற்றும் வாய்ப்பு அவர்களுக்கு வாய்க்கவில்லை; அமையவில்லை. இயேசு பெருமான் செம்மையாக செயல் வடிவியல் காட்டினார். கிறித்தவ மதம் என்ற எல்லைக்கு அப்பாலும் கிறிஸ்துவின் சீடர்கள் உலகம் முழுக்க பரவிக் கிடப்பது அவரின் சொல்லால் மட்டுமல்ல;செயல் வடிவ வழிகாட்டலால்தான்.


இயேசு பெருமான் ,அன்று அவர் வாழ்ந்த சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக குலுக்கி எடுத்தார். அரசியல் பீடமும் ,மத பீடமும் ஒன்று சேர்ந்து கைகோர்த்து சாதாரண மக்களை எல்லா விதத்திலும் சூறையாடிக் கொண்டிருந்தது .இத்தகைய சூழலில் அடித்தட்டு மக்களின் விடி வெள்ளியாக ,ஏழைகளின் தோழனாக ,புறந்தள்ளப் பட்ட சமுதாயத்தினரின் நம்பிக்கையாக ,கைம்பெண்களின் விடுதலை வீரனாக ,தொழு நோயாளர்களின் நண்பனாக ,மத சட்டங்களின் சுரண்டல்களில் இருந்து மக்களை விடுவிக்கும் விடுதலை நாயகனாக கிளர்ந்து எழுகின்றார் ஒரு 'தச்சனின் மகன்".

இன்று மதமும் அரசியலும் கைகோர்த்து கோரத்தாண்டவமாடும் இந்திய சூழலின் விடிவெள்ளியும் வழிகாட்டுதலுமாகத் திகழ்வது அந்த தச்சனின் மகன் இயேசு பெருமான் மட்டுமே.


இத்தகு கோர சூழல்கள் இந்தியாவில் கருக் கொண்டு உருப்பெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே 1970 களின் பிற்பகுதியில் கத்தோலிக்க எழுத்தாளர்கள் பலர் ஒன்று கூடி தமிழக திரு அவையின் கதவுகளைத் தட்டினர் . பல கட்ட ஆய்வுகளுக்கு பின் நாளிதழ் இப்போதைக்கு இயலாது. அங்கங்கு மாதப் பத்திரிக்கைகள் இருப்பது போல் தமிழகத்துக்கு கென்று ஒரு பொது மாதப் பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டப்பட்டது. பதிலில் நிறைவடையாத எழுத்தாளர்கள் நாளிதழ் குறித்த தொடர் கோரிக்கையில் வலுவாக நின்றதால், வார பத்திரிகை தொடங்க முடிவு ஏற்பட்டது. நம்வாழ்வின் தொடக்கப் புள்ளி துவங்கியது.


நம்வாழ்வு வெளியீட்டு சங்கம் துவக்கப்பட்டது . நம்வாழ்வு துளிர் விட்டது. நம்வாழ்வின் துவக்க காலங்களில் 1981 முதல் 1995 வரை பதினைந்து ஆண்டு காலம் நம்வாழ்வு வெளியீட்டு சங்கத்தின் செயலராகவும் , நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்து சிந்தித்து, கலந்துரையாடி ,தீர்மானித்து , ஒப்புதல் பெற்று ,ஓடி உழைத்து நம்வாழ்வை வளர்த்தவர்கள் திரு மிகு AMMS சேவியர் அவர்கள். இடையிடையே இந்த கால கட்டத்தில் சிந்தித்து வடித்து ராணி சேவியர் என்ற புனைப் பெயரில் நம்வாழ்வில் வெளியிட்ட Brain stroming கட்டுரைகள் ஏறத்தாழ 250 . அதில் பத்தை மட்டும் பிரித்தெடுத்து ஒரு நூலாக தொகுக்கையில் கவிஞர் வைரமுத்துவிடம் தந்து கருத்துக் கேட்டபோது அந்த வடுகப் பட்டி தென்றல் வாசித்து சென்ற வைர வரிகள் இதோ......

19 views0 comments
bottom of page